#JUSTIN || சாத்தான்குளம் வழக்கு..ஆய்வாளரின் ஜாமின் மனு தள்ளுபடி

x

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு.

தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல்

ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில்

ஸ்ரீதரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ, ஜெயராஜின் மனைவி செல்வராணி, அரசுத்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 19 ம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளுக்கு மேல் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு:

இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பதுள்ளதாகவும். தந்தை, மகன் இறப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே தனக்கு பிணை வழங்கி உத்தர விட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ செல்வராணி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்