#JUSTIN | அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த NLC - கொதித்த மக்கள்... கடலூரில் திடீர் பரபரப்பு
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் பல நாட்களுக்குப் பிறகு என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணியில் தற்போது நிலம் மனைகளை என்எல்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் தற்போது சமன் செய்தனர். இந்நிலையில் இதனை அறிந்த வளையமாதேவி கிராம மக்கள், விவசாயிகள் பலர் பணி நடைபெறும் இடத்தில் ஒன்று திரண்டனர் அப்போது கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இன்னமும் முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை. வாழ்வாதார பாதுகாப்பு கிடைக்கவில்லை. வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இல்லை.. தற்போது இந்த பகுதியிலேயே இன்னமும் கைப்பற்றப்பட்ட இடங்கள் 100 ஏக்கருக்கு மேல் இருக்கிறது அதற்கான எந்தவிதமான நிவாரணமும் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டை தந்து விட்டு நீங்கள் பணியை துவக்குங்கள்.
நாங்கள் அதிகாரிகள் பணி செய்வதை தடுக்கவில்லை என விவசாயிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மேடான பகுதிகள் தொடர்ந்து சமன்படுத்தப்பட்டது. இதற்காக போலீசரும் குவிக்கப்பட்டனர். பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு விவசாயிகள் கிராம மக்களின் கோரிக்கைப்படி பேச்சு வார்த்தைக்கு பிறகு விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும் என்று நடைபெற்ற பணியை அதிகாரிகள் நிறுத்தினர். ஆனாலும் அங்கே கூடி இருந்த கிராம மக்கள் விவசாயிகளும் நீங்கள் தற்போது இப்படித்தான் கூறுவீர்கள் ஆனால் மீண்டும் எங்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு உங்களது பணியை மேற்கொள்வீர்கள் அதனால் எங்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டு நீங்கள் எந்த வேலையும் செய்யலாம் அதற்கு நாங்கள் தடை சொல்லவில்லை என்ற பிறகு வேறு வழியில்லாமல் ஜேசிபி எந்திரங்களையும் மற்றும் அதிகாரிகள் வந்த ஜீப்பும் திரும்பிச் சென்றது.