ஜெயக்குமார் மரணம் - நீங்காத மர்மம் - அடிக்கடி போனில் பேசியது யார் யார்? தீவிர விசாரணையில் போலீசார்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், தனது வீட்டுப் பின்புறம் உள்ள தோட்டத்தில் கடந்த நான்காம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் மரணம் கொலையா ? தற்கொலையா ? என சந்தேகம் நீடிக்கும் நிலையில், இது குறித்து 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமாரின் சடலம் மீட்கப்பட்டு 10 நாள்களாகியும் எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில், ஜெயக்குமாருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியவர்களின் பெயர் பட்டியலை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜெயக்குமாருடன் தொலைபேசி தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வரும் நிலையில், உறவினர்கள் தொடங்கி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் விசாரணை வளையத்தினுள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story