"ஜல்லிக்கட்டு டோக்கன்களை அமைச்சர் எடுத்துக் கொண்டார்" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

x

அமைச்சர் மூர்த்தி மொத்த ஜல்லிக்கட்டு டோக்கன் களையும் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மதுரை- தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுவது, தென்மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் கிடைக்காமல் காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் அலைகிறார்கள் என்றும், அமைச்சர் மூர்த்தி மொத்த டோக்கன்களையும் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடுகிறார் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்