போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற சோனை கருப்பன்

போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற சோனை கருப்பன்
x

கருகரு வண்ணத்தில் ஆட்களை மிரட்டும் தொனியில் சோனை கருப்பனையும் அதன் கொம்பையும் பார்த்து மிரளாதவர்கள் கிடையாது...

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடங்க நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உசேன் போல்ட் போல பயிற்சி அளித்து வருகிறார்கள் அதன் பயிற்சியாளர்கள்..


பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் தங்கள் காளைகள் வெற்றி பெறுவதே தங்களுக்கான மிகப் பெரிய வெற்றியாக கருதுகின்றனர் அதன் உரிமையாளர்கள்

மதுரை மாவட்டம் இளம்மனூர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற இளைஞர் சோனை கருப்பன் , பென்சில், நல்ல பாம்பு, காளிஸ்‌ என நான்கு காளைகளை ஜல்லிக்கட்டிற்காகத் தீவிரமாகத் தயார்ப் படுத்தி வருகிறார்.

இரண்டு கிலோ மீட்டர் வாக்கிங், அரை மணி நேர ஸ்விம்மிங், அரை மணி நேரம் மண் குத்துதல், வடம் பிடித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகளை அளித்து காளைகளை தயார் செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாது தற்காலிக வாடி வாசல் போன்று செட்டப் செய்து அதில் மாட்டை அவிழ்த்து விட்டு பயிற்சி செய்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்