ஜல்லிக்கட்டு போட்டியை பாதியிலேயே நிறுத்திய போலீசார் - வாக்குவாதம்
வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில், 500 மாடுகளும் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில், முதல் சுற்று நிறைவடைந்தது. தொடர்ந்து 2-ம் சுற்று தொடங்குவதற்கு முன்பாக 200-க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் நுழைவு வாயிலில் குவிந்தனர். இதனால் வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்து விட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், போலீசார் முன்னெச்சரிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டியை பாதியிலேயே நிறுத்தினர். இதனால் காளை உரிமையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story