உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை - மக்கள் அஞ்சலி
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் பல வெற்றிகளை பெற்ற காளை வயது காரணமாக உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 9ஏ நத்தம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் வளர்த்து வந்த மாணிக்கம் என்ற காளை பல இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றிகளை குவித்துள்ளது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக காளை உயிரிழந்ததை தொடர்ந்து ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Next Story