பின்னணி பாடகர்களை விஞ்சுமளவு திறமையாக பாடிய சிறைவாசிகள்.. சிறைக்குயில்கள் குரல் திரையில் ஒலிக்கவும் வாய்ப்பு...

x

கூண்டில் காலம் கழிக்கும் இந்த சிறைக்குயிலின் குரலைக் கேட்கும்போதே கண்ணீர் வருகிறது... இவ்வளவு திறமையும் இத்தனை நாள்கள் வெளியில் தெரியாதது ஏன்?...


சேலம் மத்திய சிறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது நடந்த ஜெயில் சிங்கர் போட்டி தான் இது...

கண்ணதாசன் சொன்ன மூங்கில்களும்...மலர் தோட்டங்களும்...மேகங்களும்...ராகங்களும்...பரந்தாமன் புகழ் பாடியிருந்தால் எந்தளவு இனித்திருக்குமோ...அதேயளவு இனித்தது இந்த முதியவரின் குரலைக் கேட்கையில்...

வெந்து தணிந்தது காடு படத்தில் வெளிநாட்டில் தவிக்கும் தன் கணவனை நினைத்து மனைவி "மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே"...என்று உருகி உருகி பாடியிருப்பார்...அதேபோல் சூழல் தான் இங்கு...அது வெளிநாடு...இது சிறைச்சாலை..."கொடியிலே...மல்லியப்பூ...மணக்குதே மானே..." என்று காதலால் கசிந்துருகி மெய்சிலிர்க்க வைத்து விட்டார் இந்த சிறைவாசி...


சிறைவாசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்...ஜெயில் சிங்கர் போட்டி அனைவரையும் குதூகலிக்கச் செய்தது...

சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் தலைமை தாங்கிய இந்நிகழ்வில்...200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

"ஜெயில் சிங்கர்"ஆக மகுடம் சூடியது நம் செல்வகுமார் தான்...

வெற்றியாளர்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்ததும் சக சிறைவாசிகளே...

சிறையில் இருக்கும் இவர்கள் தங்கள் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் திரையில் வரவும் வாய்ப்புள்ளது என்பதில் ஐயமில்லை...


Next Story

மேலும் செய்திகள்