"உடனே அதை செய்ய வேண்டும்.." - சென்னை முழுவதும் பறந்த அதிரடி அறிவிப்பு
"உடனே அதை செய்ய வேண்டும்.." - சென்னை முழுவதும் பறந்த அதிரடி அறிவிப்பு
#chennai #elections2024 #thanthitv #police
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்ததை அடுத்து, சென்னையில் உரிமம் பெற்ற 2 ஆயிரத்து 125 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தவறினால் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார் ஒப்படைக்க நிர்பந்திக்க வேண்டும் என்றும், உரிமம் பெற்ற துப்பாக்கிகள் சமர்பித்தது குறித்த அறிக்கை அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம், துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்கள் அனுமதி பெற்று பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இதுவரை ஆயிரத்து 2 பேர் மட்டுமே துப்பாக்கிகளை ஒப்டைத்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது