ஆசை மகளின் வாழ்நாள் கனவை நனவாக்கி "ஆனந்த யாழை" மீட்டிய அமேசான் தலைவர் - சென்னையை உருகவிட்ட அப்பா - மகள் பாசம்

x

தனது மகளின் கனவை நிறைவேற்றும் வகையில், அமேசான் இந்தியா தலைவர் அமித் அகர்வால் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி உள்ளார்.. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பெண்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சானிட்டரி நாப்கின்கள் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பெண்கள் தங்களுக்கு தேவையான நாப்கின்களை தாங்களே தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் இப்போது பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வரும் அமீத் அகர்வால், தனது மகளின் கனவை நிறைவேற்றும் வகையில், சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி உள்ளார்..

பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமேசான் இந்தியா தலைவர் அமீத் அகர்வாலின் மகளான ஆஷி,

பெண்களே சொந்தமாக தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நாப்கின் இயந்திரங்களை பல பெண்களுக்கு வழங்கி வருகிறார்.

அந்த வகையில், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை சுயமாக தயாரிக்கும் இயந்திரம் பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மற்றும் மாணவிகளிடையே ஏற்படுத்தும் வகையில்,

தொடர்ந்து பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறார்.

அந்த வகையில், அவரது விருப்பத்தின் கீழ், சென்னை பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்களே சுயமாக தாயாரிக்கும் நாப்கின் இயந்திரத்தை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், தனது மகளின் அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்த அமேசான் இந்தியா தலைவர் அமித் அகர்வால், தன்னுடைய மகள் ஆஷியின் விருப்பப்படி, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாப்கின் தாயாரிக்கும் இயந்திரத்தை மாணவிகளிடம் வழங்கினார்.

அப்போது, அவருடன் சேர்ந்து, கல்லூரி மாணவிகள் சொந்தமாக நாப்கின்களை தயாரித்து மகிழ்ந்தனர்.

பெண்கள் எளிய முறையில் நாப்கின் தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த இயந்திரம், கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உடன் கலந்துரையாடிய அவர், அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன் பின்னர் கல்லூரி வளாகத்தில் பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டு, மாணவ, மாணவியர் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த், கல்லூரி முதல்வர் டாக்டர் திருமுருகன், துணை முதல்வர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்