"அப்பா, நான் இஸ்ரோ தலைவராகிவிட்டேன்"..மகன் சொன்ன விஷயத்தை கேட்டு உணர்ச்சி பொங்க பேசிய சித்தப்பாக்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல காட்டுவிளை பகுதியை சேர்ந்த நாராயணன், இஸ்ரோவின் 11வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் சோம்நாத் ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைவராக நாராயணன் வருகிற 14ஆம் தேதி பதவியேற்க உள்ளார். தந்தையை இழந்த நாராயணன், தொலைபேசியில் தனது தந்தையின் சகோதரர்களை தொடர்புகொண்டு இஸ்ரோ தலைவராக தேர்வான தகவலை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த நாராயணின் சித்தப்பாக்கள், கண்ணீர் மல்க அவரை வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்கு வருவதாக குடும்பத்தாரிடம் நாராயணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்