மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்... நடந்தது என்ன? ரயில்வே அமைச்சர் விளக்கம்

x

மதுரை, தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழக அரசுடன், நிலம் தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை என ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.

கடந்த 10ஆம் தேதி சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலம், சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாக, தனுஷ்கோடி பாதை கைவிடப்படலாம் என மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதை மதுரை, தூத்துக்குடி திட்டம் பற்றி அமைச்சர் கூறியதாக செய்தியாளர்கள் புரிந்து கொண்டதால், எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசுடன் நிலம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இரைச்சலான தொழிற்சாலை சூழலில் ஊடகவியலாளர்கள் ஒரே நேரத்தில் பல கேள்விகளைக் கேட்டதால் தவறான தகவல் புரிதல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்