ரன் மழையில் நனைந்த சேப்பாக்கம்..ஒரே நாளில் 525 ரன்கள் - புதிய சாதனை படைத்த இந்திய அணி

x

ரன் மழையில் நனைந்த சேப்பாக்கம்..ஒரே நாளில் 525 ரன்கள் - புதிய சாதனை படைத்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய மகளிர் அணி 525 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீராங்கனைகள் சஃபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் தென் ஆப்பிரிக்க பவுலிங்கை பதம் பார்த்தனர். பவுண்டரிகளை தொடர்ந்து பறக்கவிட்ட சஃபாலி வர்மா இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். ஸ்மிருதி மந்தனா சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 292 ரன்கள் குவித்தது. இவர்களின் அதிரடியால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் அதிக ரன்கள் அடித்த அணி என இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்