முக்கிய புள்ளி வீட்டில் தொடரும் ரெய்டு... உடைத்து உள்ளே சென்ற IT அதிகாரிகள் - பரபரக்கும் திண்டுக்கல்

x

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற நிதி நிறுவன அதிபர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவிப்பதாக தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில்குமார் தொடர்புடைய இரண்டு இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் ஒரு நகைக்கடை, பெட்ரோல் பங்க், மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் செந்தில் குமார் வீட்டில் நேற்று இரவு சோதனை செய்த போது, கார் செட் மற்றும் டிரைவர்கள் தங்கும் அறையை உடைத்தும் காரை திறந்து பார்த்தும் சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்