பாஜக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்... உறவினர்கள் சாலை மறியல் - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்தவரின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
நெல்லை பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் முருகன் குறிச்சி சாலையில் உயிர் இழந்த நபர்களின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்
நெல்லை பாளையங்கோட்டை மூளிகுளத்தில் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேரை பிடித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2002 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் எற்பட்ட தொடர் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோனத்தில் விசாரணை.
முன் விரோதத்தை மனதில் வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொடை விழாவில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்ததாக தகவல்