ஒரே நொடி.. பயங்கர சத்தம்.. அதிர்ந்த திருப்பூர் - நடுரோட்டில் கவிழ்ந்த எரிவாயு ஏற்றி சென்ற லாரி

x

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குஜராத் நோக்கி எரிவாயு லாரியை முருகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சர்வீஸ் சாலையில் லாரி சென்றுகொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக மழைநீர் வடிகால் பாதையில் லாரி இறங்கி, சாலை நடுவில் உள்ள தடுப்பில் கவிழ்ந்தது. விபத்தில் லாரி ஓட்டுநர் உயிர்த்தப்பிய நிலையில், அதிர்ஷ்டவசமாக எரிவாயு டேங்கர் சேதம் அடையாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் லாரி மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்