"நான் தான் கொன்னேன்.."மனைவியை கொன்று விட்டுஅவர் சொன்ன காரணம்..அதிர்ந்து போன போலீசார் | Salem

x

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகேயுள்ள காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. 78 வயது முதியவரான இவர், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அலுவலரான நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு மனைவி லட்சுமியுடன் தூங்கி கொண்டிருந்த கந்தசாமி, திடீரென அம்மிக்கல்லை மனைவியின் தலையில் போட்டு அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவியை கொன்று விட்டு தாமாகவே சென்று, பக்கத்து வீட்டில் வசித்து வந்த மகனை அழைத்து வந்த கந்தசாமி, தாயை அம்மிக் கல்லால் அடித்து கொன்றதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர் தனது மனைவியை தானே கொன்றதாக வாக்குமூலம் அளிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்