கணவனை கொன்றவனை கருவறுத்த மனைவி.. சோறு போட்டு வளத்து நேரம் வந்ததும் ரத்தம் குடித்த `சத்யா’
வட சென்னை படப் பாணியில் சேலத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் அதிரவைத்து இருக்கிறது. அந்த படத்தில் ராஜன் கொலைக்குச் சந்திரா பழி தீர்ப்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட இதே பாணியில் நடைபெற்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது
பீரோ பட்டறை உரிமையாளர் காரில் சென்ற போது அவரது காரை மற்றொரு கார் மூலம் துரத்திய கும்பல் அவரது கார் மீது மோதி காரினுள் இருந்த உரிமையாளரைச் சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் காட்டூர் ஆனந்த். பிரபல ரவுடியான இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையிலிருந்தன. இவரது சகோதரரான அன்பழகனும் அவருடன் சேர்ந்தே செயல்பட்டு வந்து இருக்கிறார். அன்பழகன் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்குள்ளும் பகை வளர்ந்துள்ளது. மேலும் அன்பழகன் மீதுள்ள ஒரு வழக்கில் சாட்சியங்களைத் தயார் செய்து அதன் மூலம் அன்பழகனைச் சிறையில் தள்ள காட்டூர் ஆனந்த் முயன்றதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் காட்டூர் ஆனந்தனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் காட்டூர் ஆனந்தனால் முத்து என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிதீர்ப்பதற்காக முத்துவின் தம்பியும் பீரோ பட்டறை நடத்தி வருபவருமான
சரவணன் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், அன்பழகன் சரவணனைச் சந்தித்து சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெள்ளியம் பட்டி அருகே காட்டூர் ஆனந்த கொடூரமாகக் கொலை செய்யப்பட்டர்.
பிரபல கேங்ஸ்டராக வலம் வந்த தனது கணவனைக் கொன்ற கும்பலை பழி தீர்க்க அவரது மனைவி சத்யா தனது ஆட்களுடன் ஸ்கெட்ச் போட்டு பொறுமை காத்து வந்து இருக்கிறார்.
எப்படியும் காட்டூர் ஆனந்தன் ஆட்களால் தனது
உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த அன்பழகன், தன் மீதுள்ள வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது டார்க்கெட்டான சரவணனைக் கடந்த ஒரு மாத காலமாக சத்யாவின் ஆட்கள் ஃபாலோ செய்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பீரோ பட்டறைக்குச் சென்ற சரவணனைச் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் சத்யா மற்றும் அவரது தம்பிகள் உட்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
தனது கணவர் கொலைக்குக் காரணமானவர்களை ஒரு வருடம் பொறுமை காத்து அவரது மனைவி செய்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.