கணவனோடு வீடியோ கால் பேசிவிட்டு பெண் தற்கொலை

x

தந்தையும், தாயும் தற்கொலை...

பரிதவிக்கும் 2 குழந்தைகள்...

வெளிநாட்டில் இருந்த தந்தையும், தமிழ்நாட்டில் தாயும் தற்கொலை செய்து கொண்டதால், 2 பெண் குழந்தைகள் பரிதவிக்கும், மனதை ரணமாக்கும் நிகழ்வு பற்றிய தொகுப்பை பார்க்கலாம்....

VT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அத்தியா நல்லூர் கிராமத்தில் 2 பெண் குழந்தைகளின் தாயும், சிங்கப்பூரில் இருந்த தந்தையும் ஒரே நாளில் தற்கொலை செய்ததால், 2 குழந்தைகளும் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்...

சிங்கப்பூரில் வேலை செய்து வந்த கணவரிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மறைவை அறிந்த கணவனும் சிங்கப்பூரிலேயே தற்கொலை செய்துள்ளார்.

ப்ரீத்..

சிதம்பரம் அருகே அத்தியா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பன்னீர் செல்வம் - கௌரி தம்பதியினர். திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம், ஒவ்வொரு விடுமுறைக்கும் வீட்டிற்கு வரும்போது எல்லாம், மனைவி கௌரியிடம் மது குடித்து விட்டு சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனாலேயே, மனைவி கௌரி ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி தனது கணவரின் வீட்டுக்கு வந்த கௌரி, சிங்கப்பூரில் இருந்த கணவருடன் வீடியோ காலில் பேசிய சில மணி நேரத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ப்ரீத்..

இந்த சம்பவம், சிங்கப்பூரில் இருந்த கணவரின் தலையில் பேரிடியாக விழவே, அவரும் சிங்கப்பூரில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார், கௌரியின் உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

4மருமகனின் அப்பாவோ, உடன் பிறந்தவர்களோ கண்டுகொள்ளவே இல்லை"

சேர்ந்து வாழலாம்.. என தனது மகளை அழைத்து வந்த நிலையில், மகள் கௌரி தற்கொலை செய்திருப்பதால் அவரது தந்தை கொளஞ்சிநாதன் அழுது துடித்த சம்பவம் மனதை கதிகலங்க வைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்