ஆழ்கடலில் இருப்பது போல் பிரம்மாண்ட விநாயகர் செட்..!பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய சினிமா கலைஞர்கள்

x

ஓசூரில், 12 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட்

அமைத்து, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே, சிவ சேனா மற்றும் ஹிந்து

ஜனசேனா அமைப்புகள் சார்பில், குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோயிலின் அழகை காட்சிப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கையாக நீர் வீழ்ச்சி அமைத்து, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகை நகரத்தின் வரலாறு குறித்த புகைப்படங்கள் மற்றும் குகைக்கு உள்ளே செல்வது போன்ற செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அளவிலான விநாயகர்

இரண்டு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தி கண் சிமிட்டியபடி

அமர்ந்துள்ளார். அவருக்கு பல வகையான உணவுப் பொருள்கள் படையல் இடப்பட்டுள்ளது. விநாயகரின் தலை மீது அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை பாம்பு மூலம் கடையும் காட்சிகள் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில், சினிமா கலைஞர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இதை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து தங்களது செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்