மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஆட்டை போல் வெட்டிய ரத்த வெறியன் - பின்னணியில் இருக்கும் `சத்தியவதி' யார்?

x

நீதிமன்ற வளாகத்தில் கையில் கோப்புகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை, குமாஸ்தா ஒருவர் பின் தொடர்ந்து வந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


ஓசூர் நீதிமன்ற வளாகத்தின் முன் பட்டப்பகலில் நடந்த கொடூரத்தின் உச்சம்தான் இந்த சம்பவம்...

வழக்கறிஞர் ஒருவரை பெருவாரியான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில்... வக்கீலுக்கு குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த ஒருவர் அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டியிருக்கிறார்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்த கண்ணன் என்ற வழக்கறிஞர் இந்த சம்பவத்தில் வெட்டப்பட்டிருக்கிறார்..

சத்தியநாராயணா என்ற வழக்கறிஞரிடம் கண்ணன் உதவியாளராக பணிபுரிந்த நிலையில், அவருடன் பணிபுரிந்து வந்த சத்தியவதி என்ற வழக்கறிஞருக்கு கண்ணன் இடையூறாக சில நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது..

இந்நிலையில், அப்பெண் தன் கணவரான ஆனந்திடம் சொல்லவே இரு தரப்பிற்கும் மோதலாகி இருக்கிறது...

இது தொடர்பாக முன்னதாக, மூன்று முறை பேச்சுவார்த்தை வரை சென்று இரு தரப்பும் சமாதானம் ஆனதாகவும் கூறப்படுகிறது..

இந்நிலையிலும், மனைவியுடனான மோதலை கண்ணன் தொடர்ந்து வந்த ஆத்திரத்தில் அவரை ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஆனந்த் வெட்டிக் கொல்ல முயன்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..

படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாமாகவே நீதிமன்றத்தில் சரணடைந்த ஆனந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

இதனிடையே, இந்த சம்பவத்தில் கணவரை கொலை முயற்சிக்கு தூண்டியதாக கூறி, கண்ணனின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் சத்தியவதியையும் போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

ஓசூர் வழக்கறிஞர்களை இந்த சம்பவம் கொந்தளிக்கச் செய்த நிலையில், அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கி, கை துப்பாக்கி கொடுக்க வேண்டும் என கோஷமிட்டு போராட்டம் நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது...

தஞ்சாவூர் அருகே, பள்ளியின் ஓய்வறையில் இருந்த ஆசிரியையை இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து வெட்டிக் கொன்ற அதிர்ச்சிக்கிடையே, இந்த கொடூரம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்