``மனிதனின் பாவம்.. கடவுளின் கருணை’’ - உலகில் திறந்தது `புனித கதவு’
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வாடிகனில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் போது, புனித பீட்டர் தேவாலயத்தில் உள்ள புனித கதவை போப் பிரான்சிஸ் திறந்து வைத்தார். வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில், மனிதனின் பாவம், கடவுளின் கருணை ஆகியவற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் அடங்கிய வெண்கல கதவு உள்ளது. இது யூபிலி ஆண்டின் போது மட்டுமே திறக்கப்படும். அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, போப் பிரான்சிஸ் புனித கதவை திறந்து வைத்து, யூபிலி ஆண்டை தொடங்கி வைத்தார். 2026-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வரை யூபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். தொடர்ந்து, புனித கதவு வழியாக போப் பிரான்சிஸ், கார்டினல்கள் உள்ளிட்டோர் சென்று, கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.
Next Story