திருமாவளவன் வழக்கில் ஹை-கோர்ட் அதிரடி உத்தரவு | Thirumavalavan
இந்து பெண்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த சர்வதேச கருத்தரங்கில் காணொலி மூலம் பங்கேற்று, பெரியார் மற்றும் இந்திய அரசியல் என்ற தலைப்பில் திருமாவளவன் பேசிய நிலையில், மதுரை பேரையூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி, திருமாவளவன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனு ஸ்மிருதி புத்தகத்தில் கூறியுள்ளதை தான் திருமாவளவன் பேசியிருக்கிறார் எனவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Next Story