அரசு மற்றும் போலீசார் மீது... நெடுஞ்சாலைத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு..! கோர்ட் அதிரடி உத்தரவு
சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை குற்றச்சாட்டிற்கு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத கொடி கம்பங்களை அகற்ற தமிழக அரசு, காவல்துறை ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார். இதையடுத்து, தமிழக தலைமைச் செயலாளரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் குற்றறச்சாட்டிற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தர்.