சென்னை டூ மணிப்பூர்... ஹைகோர்ட் தலைமை நீதிபதியானர் நீதிபதி கிருஷ்ணகுமார்

x
  • சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி D.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிரிதுள், நவம்பர் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66ஆக குறைந்து, காலியிடங்கள் ஒன்பதாக அதிகரிக்கிறது. 1987ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய D.கிருஷ்ணகுமார், மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராக பணியாற்றிய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2016இல் நியமிக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்