ஹை பீம் லைட்டால் சாலை தடுப்பில் மோதிய பெண்? காருக்குள் இருந்த குழந்தையை காத்த பொருள்..

x

நாகர்கோவிலில் குமரி ஆட்சியர் அலுவலகம் அருகே, கார் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை மற்றும் 2 பெண்கள் உயிர் தப்பினர். நேசமணி நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண், கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் தனது சொகுசு காரில் சென்றுக் கொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவில் உள்ள தடுப்பில் பயங்கரமாக மோதியது. சீட் பெல்ட் அணிந்திருந்த‌தாலும், ஏர் பேக் வெளியே வந்த‌தாலும், அவர்கள் உயிர் தப்பினர். எதிரே வந்த வாகனங்களின் வெளிச்சம் அதிக அளவில் காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்