ஹெலிகாப்டரில் பறக்க ஆசையா.. இதோ உங்களுக்காக..
பொள்ளாச்சியில் ஹெலிகாப்டர் ரைடு சென்று கிராமப்புற அழகை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். பொள்ளாச்சி திருவிழா, கடந்த 22-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், சக்தி மில் வளாகம் பகுதியில் ஹெலிகாப்டர் ரைட் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. அதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு ஹெலிகாப்டர் ரைட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவை, திருப்பூர், சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் பயணம் செய்து, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளின் அழகை கண்டு ரசித்தனர். ஹெலிகாப்டரில் 10 நிமிடங்கள் சவாரி செய்வத்றகு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் பயணம், த்ரில்லிங்காக இருந்ததாக அதில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
Next Story