கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் விழுப்புரம், தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story