"அழிவை நோக்கி உலகம்.. தமிழகமே குறி..மனிதன் தாங்க முடியாத வெப்பம் வரும்..உயிர்கள் அழியும்..

x

"அழிவை நோக்கி உலகம்.. தமிழகமே குறி..மனிதன் தாங்க முடியாத வெப்பம் வரும்..உயிர்கள் அழியும்.. நிறுத்துவது சாதாரணமல்ல" - அண்ணா பல்கலை. அதிர்ச்சி ரிப்போர்ட்

2 ஆயிரத்து 100ம் ஆண்டில் மனிதர்கள் தாங்க இயலாத அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும், இதனால் மனித உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிர்ச்சிகர ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் , வெப்பம் ஆகியவற்றை தற்போது ஒப்பிடும்போது வெப்பம் அதிகரித்து இருக்கிறது என்றும், இது 2050-ஆம் ஆண்டுக்குள்ளும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவும், மேலும் கடுமையாக உயரும் என்றும், அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 2,100 ஆம் ஆண்டுக்குள் வெப்ப அலையின் நாட்கள் ஓராண்டுக்கு 4 முதல் 10 நாட்கள் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றத்துறையின் இயக்குனர் பேராசிரியர் குரியன் ஜோசப், தமிழகத்தில் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம், வெப்ப அளவு குறித்த வரைவு அறிக்கையை, கடந்த மார்ச் மாதத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அளித்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்