இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • குடியரசுத் தலைவர் உரையின் போது, நீட் நீட் என எதிர்க்கட்சிகள் முழக்கம்.... வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை அரசு நிச்சயம் தண்டிக்கும் எனவும், குடியரசுத் தலைவர் உரையில் உறுதி.....
  • நீட் முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு..... தடுப்புகளை தகர்க்க முயன்றதால், போலீசார் தடியடி.....
  • ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்..... சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்..... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தல்.......
  • விஷச்சாராய விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கேட்டால், எங்களை வெளியேற்றிவிட்டு முதலமைச்சர் பதில் அளிப்பதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு........ சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளித்து, அதற்கு பதில் அளிப்பதுதான் நல்ல அரசுக்கு அழகு என்றும் காட்டம்.........
  • அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி திடீர் ஆதரவு..... நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈபிஎஸ்-யை நேரில் சந்தித்து ஆதரவு....
  • நாடாளுமன்றத்தில் செங்கோலை அவமதித்த சமாஜ்வாதி எம்.பி-க்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்...... இந்தியா கூட்டணியினர் தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் அவமதிப்பதாக குற்றச்சாட்டு.........
  • டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்..... இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்.... மழை நின்றதால் மீண்டும் தொடங்கிய போட்டி..

Next Story

மேலும் செய்திகள்