காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை நான்காம் கட்டத் தேர்தல்.. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தியது தேர்தல் ஆணையம்.....


2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சியமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டை கட்டமைப்பதற்கான தேர்தல் என பிரதமர் மோடி பேச்சு.. மூன்று கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், இந்தியா கூட்டணி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக தாக்கு....


ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றை டெல்லியில் இருந்து, 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயக்குகிறார் பிரதமர் மோடி....ஒய்.எஸ்.ஷர்மிளாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி விமர்சனம்....


ராகுல் காந்தியும் பிரதமர் மோடியும் பொது விவாதத்திற்கு வர வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பரபரப்பு கருத்து...நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார், பிரதமர் மோடியும் முன்வர வேண்டும் என ராகுல்காந்தி அழைப்பு....


2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி பாட்டியலா ஹவுஸ் நீதிமன்றத்தில் 4000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..... என்சிபி அதிகாரிகள் மிரட்டி வாக்குமூலம் பெற்றிருப்பதாக ஜாபர் சாதிக் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு.....


அக்னி நட்சத்திரம் வாட்டிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை... சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் தணிந்தது........


தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.... கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என அறிவிப்பு....


ஐபிஎல் தொடரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை.... இரவு 7.30-க்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில், பெங்களூரு- டெல்லி அணிகள் மோதல்......


Next Story

மேலும் செய்திகள்