H1N1 இன்புளூயன்சா `பன்றி காய்ச்சல்' - தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில்...?
H1N1 இன்புளூயன்சா எனப்படும் பன்றி காய்ச்சல், கடும்
உடல் வலி, இருமல், காய்ச்சல் போன்றவறை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் இதன் தாக்கம் பற்றி தமிழ் நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பன்றிகளில் இருந்து பரவும் வைரஸினால் ஏற்படும் இந்த காய்ச்சலினால் 2023இல் தமிழகத்தில் 3 ஆயிரத்து 544 பேர் பாதிக்கப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இவர்களில் 19 பேர் நோய்க்கு பலியானார்கள். அதே சமயத்தில் 2024இல், மே 27 வரை தமிழகத்தில் மொத்தம் 283 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஏற்பட்ட மழைகளின் போதும் பன்றி காய்ச்சல் பரவல் அதிகரிக்கவில்லை. கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில்
அதன் பரவலை தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.