குகேஷிற்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குகேஷ் மகத்தான சாதனை படைத்து இருப்பதாகவும் சர்வதேச செஸ் தலைநகராக சென்னை திகழ்வதை குகேஷின் வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குகேஷின் வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் மீது ஒளி பாய்ச்சி இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். இதேபோல் புதுவை முதல்வர் ரங்கசாமி, புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story