குஜராத் சென்று அலறவிட்ட தமிழக போலீஸ்

x

பெரம்பலூர் அருகே அய்யலூரை சேர்ந்த செல்வகுமாரி என்பவர், தோட்டக்கலை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர், சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக இன்ஸ்டாகிராம் செயலியில் வந்த தகவலை நம்பி, 63 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்த‌தாக கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் சென்று, ஷர்மா சுனில் குமார், ஷர்மா பன்சிலால் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய், 4 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், 7 ஏ.டி.எம் கார்டுகளை கைப்பற்றினர். குஜராத்தில் உள்ள வடோதரா நீதிமன்றத்தில் 2 பேரையும் ஆஜர்படுத்தி, பின்னர் பெரம்பலூர் அழைத்து வந்தனர். வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 2 பேரையும் திருச்சி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்