#JUSTIN || விக்னேஷ் மரணம்... கிண்டி ஹாஸ்பிடல் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் | Guindy Hospital
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் உயிரிழந்த விக்னேஷுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை மருத்துவமனை வெளியிட்டுள்ளது
13.11.2024 அன்று இரவு 11:25 மணிக்கு கடுமையான வயிற்று வலி காரணமாக இங்கு அனுமதிக்கப்பட்டார்
முன்னதாக செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் கணையம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்தவர் பணம் செலுத்த இயலாத நிலையில் இந்த மருத்துவமனைக்கு வந்தார்
கடுமையான குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு அதோடு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தான் இங்கு அனுமதிக்கப்பட்டார்
அவருக்கு தைராய்டு சுரப்பி வியாதியும் இருந்தது
அவருடைய உடல்நிலை குறித்து அவரின் தந்தை மனைவி சகோதரன் சகோதரி ஆகிரும் தெளிவாக கூறப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வாய் வழியாக சேர்க்கை குழாய் பொருத்துவதற்கு குடும்ப உறுப்பினர்களும் ஒப்புதல் பெறப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது
காலை 9 18 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்