ரெடியான புதிய குளம்.. - "இனி வேளச்சேரியில் தண்ணீயே நிற்காது.."

x

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் குளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு குளம் முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள 160 ஏக்கர் ரேஸ் கிளப், தற்போது தமிழக அரசின் வசம் உள்ளது. வேளச்சேரியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை குறைக்க இந்த ரேஸ் கிளப் மைதானத்தில், நீர்நிலையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்தது. அதன்படி, ரேஸ் கிளப்பில் நான்கு குளங்களை வெட்ட தமிழக அரசு முடிவெடுத்து, பணிகளை தொடங்கியது. இதில், ஒரு குளம் தற்போது முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 குளங்களை வெட்டும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்