வரி, வட்டி, அபராதம்..நாடு முழுவதும் அதிரடி மாற்றம் - நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன்,GST சட்டத்தின் பிரிவு 73ன் கீழ் வழங்கப்பட்ட அனைத்து நோட்டீஸ்களுக்கும் 2025 மார்ச் 31ம் தேதிக்குள் வரி செலுத்தியிருந்தால் அவற்றின் மீது வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ரயில்வே சார்பில் வழங்கப்படும் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ஸ்டீல், இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து வகையான கார்ட்டன் அட்டைப் பெட்டிகளின் மீது 12 சதவீதம் என்ற அளவில் ஒரே விதமான ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.