அரசு பஸ் விபத்தால் ஸ்தம்பித்த GST சாலை....1 இன்ச் கூட நகர முடியாமல் தவித்த வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து முன்னால் சென்ற டெம்போ வேன் மீது மோதியதில் வேனில் பயணம் செய்தவர்களில் நான்கு பேர் காயம் அடைந்தனர் இந்த விபத்தால் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்க்கு வந்த மதுராந்தகம் போலீசார் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story