ஹாஸ்பிடலுக்குள் பெண் செய்த காரியம் - வைரலாகும் பரபரப்பு வீடியோ | Chengalpattu | Chennai | Thanthi TV
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் தகுதி சான்றிதழ் பெற ஜிபேவில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஓ பி சீட் வழங்கும் இடத்தில் உள்ள ஊழியர் ஒருவரிடம் சென்று உடல் தகுதி சான்றிதழ் கேட்டபோது, அவர் மருத்துவர் லஞ்சம் கேட்பார் என கூறி ரூபாய் 800 -ஐ ஜிபே மூலம் பெற்றுகொண்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சான்றிதழ் வாங்க வந்த நபரை மருத்துவர் பரிசோதிக்காமலே பணத்தை பெற்றுக்கொண்டு உடல் தகுதி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Next Story