ஆசிரியர் கிளாஸ் எடுக்கும்போது விபரீதம் - மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
அரசு பள்ளியில் கரும்பலகை விழுந்து மணவர்கள் இரண்டு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புதுநகர் அரசு பள்ளியில் 1000 மாணவ மாணவிளுக்கு மேல் பயின்று வருகின்றனர். இன்று எட்டாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கரும்பலகை தீடிரென கழன்று அருகில் அமர்ந்திருந்த மாணவர்கள் மீது விழுந்ததில் மாணவர்கள் இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்பட்ட மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Next Story