அப்பா இல்ல, அம்மா கூலி வேலை.. தடைகளை உடைத்து சாதனை.. ஊருக்கே முன்னோடியான அரசு பள்ளி மாணவி

x

அரசு பள்ளி மாணவர்களின் கூட்டத்தில் இருந்து மேலும் ஒரு மருத்துவர்...

சாலை விபத்தில் உயிரிழந்த தந்தை...

செங்கல் சூளையில் கூலி வேலை செய்து போராடி வரும் தாய்...

இந்த சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி மாணவி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் சீட் பெற்று தன் தாயை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்...

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த எஸ்.கொளத்தூரை சேர்ந்த யோகஸ்வரிதான் இந்த சாதனைக்கு சொந்தக்காரி..

நீட் தேர்வு அறிமுகமான போது, அரசு பள்ளி மாணவர்களால் இதனை எதிர் கொள்ள முடியாது என பலரும் கூறிய நிலையில், அப்படி ஒன்று இல்லைவே இல்லை எனவும், சரியான திட்டமிடலும், டைம் மேனேஜ்மென்ட்டும் இருந்தால் நீட் மிகவும் எளிது என்கிறார்...

இவையனைத்தையும், பெண் பிள்ளைகளுக்கு எதுக்கு இம்புட்டு படிப்பு எனச்சொல்லும் ஊரார்க்கு மத்தியில் படித்து இவர் சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது...

ஒற்றையாளாய் குடும்ப பாரத்தை சுமந்து, வாழ்க்கை போராட்டத்துடன் மகளின் கனவுகளுக்காக ஓடிக் கொண்டிருந்த யோகேஸ்வரியின் தாய், என் மகள்தான் எங்கூரில் முதல் மருத்துவர் என ஆனந்த கண்ணீரில் பெருமிதம் கொண்டு சற்று இளைப்பாறுகிறார்...

யோகேஸ்வரியின் சாதனை சாதாரணமானது அல்ல..

உயர் கல்விக்கு பெண்களை அனுப்புவதற்கே தயக்கம் கொள்ளும் ஊரில் இருந்து, மருத்துவராகி இருக்கிறார்..

நிச்சயம் இனி ஒவ்வொரு வருடமும், ராணிப்பேட்டை மாவட்டம் எஸ்.கொளத்தூரில் இருந்து பல யோகேஸ்வரியை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்