பயணிகளுடன் சென்ற அரசு பஸ்.. டிரைவருக்கு திடீர் வலிப்பு - அடுத்து நடந்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும்
ஈரோட்டில், அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் சாதுர்யமாக மின் கம்பத்தில் மோதி பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.
சூரம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி 15பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில், ஓட்டுநர் அண்ணாதுரைக்கு வலிப்பு ஏற்பட்டது. இக்கட்டடான நிலையிலும் சாதூர்யமாக செயல்பட்ட அவர், அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி பேருந்தை நிறுத்தினர். அப்போது ஒரு இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து ஓட்டுனரை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story