கையில் லக்கேஜோடு அரசு பஸ்ஸில் செல்வோர் கவனத்திற்கு - இதை எல்லாம் கொண்டு சென்றால்...
அரசுப்பேருந்துகளில் லக்கேஜ் கட்டணம் வசூலிப்பது குறித்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகளின் சொந்த உபயோகத்திற்கான பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் ஆகியவற்றிற்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
பயணிகள் எடுத்துவரும் ட்ராலி, சூட்கேஸ், பெரிய பைகள் ஆகியவை 65 சென்டி மீட்டர் நீளத்திற்கும், 20 கிலோ எடைக்கு அதிகமாகவும் இருந்தால், அந்த லக்கேஜிற்கு ஒரு நபருக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் லக்கேஜ்கள் 20 கிலோவுக்கு குறைவாக இருந்தாலும், ஒரு நபருக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும்....
பயணிகள் இன்றி அவர்கள் கொடுக்கும் பொருட்களை மட்டும் எடுத்து செல்லக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
Next Story