சென்னையில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை | Chennai | Governor RN Ravi

x

நாட்டின் 76வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். தொடர்ந்து விமானப் படையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ ஆளுநர் ஆர்.என்.ரவி அழைத்து வரப்பட்டார். விழா மேடையில் ஆளுநருடன் கைகுலுக்கி முதலமைச்சர் வரவேற்றார். பின்னர் தேசியக்கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்க அனைவரும் மரியாதை செலுத்தினர். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்