"அவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்கிறார்கள்" - நேரடி அட்டாக் செய்த ஆளுநர் | Governor RN Ravi

x

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வாஜ்பாய் இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்றியவர் என நெகிழ்ச்சி தெரிவித்தார். சனாதனம் என்பது, அனைவரையும் அரவணைப்பது என குறிப்பிட்ட அவர், 2014-க்கு பிறகே மக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்து வருகிறது என்றும், வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மாநிலங்களின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தநிலை மாற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பு குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகள், மத்திய பாஜக அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைப்பதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளை ஆளுநர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்