விரைவில்.. ஆளுநர் சொன்ன முக்கிய தகவல்

x

புத்தக தொகுப்பாளர் க.பக்தன் தொகுத்துள்ள 'ஒரு நூலகமே புத்தகமாக' என்னும் நூல் வெளியீட்டு விழா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். அவரிடம் இருந்து, முதல் பிரதியை பேரூர் ஆதீனம் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்றைய கால கட்டத்தில் மாணவர்களிடம் பரவி வரும் தவறான கலாச்சாரத்தை தடுக்க இது போன்ற புத்தகங்கள் தேவை என்று கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டிற்கு எதிர்பாராத வளர்ச்சிகளை தந்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் நூலகங்களில் விரைவில் கொண்டு சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்