"வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும்" - வேல்முருகன் | TN Govt
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்து, மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, அனைத்து ஜாதி அமைப்புகளுடன் இணைந்து பேரணி நடத்தப்போவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்றத் உறுதி மொழிக்குழுவின் தலைவர்வேல்முருகன் தலைமையில், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், வன்னியர்களின் 10.5 சதவீத இடக்க ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு தர வேண்டும் என வலியுறுத்தினார்
Next Story