அதிகாரிகளை அலறவிட்ட லேடீஸ்..தொக்காக தூக்கிய போலீஸ் | Kanniyakumari

x

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரில் திறந்து வைக்கப்பட்டது. தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 1 பயனாளி 1 லட்சத்து ஆயிரத்து 563 ரூபாய் செலுத்த வேண்டும். இதுவரை 137 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பங்களிப்புத் தொகை செலுத்திய 74 பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்குவதற்காக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட சென்ற போது சில வீடுகளில் வேறு நபர்கள் குடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஷகீலா, சகாய ஜென்சி, ஆதிஷ் பிரைட் மலர்கொடி ஆகியோர் கூட்டாக 69 பேரிடம் 70 லட்சத்து 7 ஆயிரத்து 847 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக நிர்வாக பொறியாளர் கையெழுத்தை பயன்படுத்தி போலி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகளுக்கு தெரியாமல் குடியிருப்புகளின் சாவியை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு சகிலா மற்றும் சகாய ஜென்சியைக் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்