தங்கம் விலை அடியோடு சரிவு.. ஏதோ 1,000.. 2,000 இல்ல.. அதுக்கும் மேல..நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், வரப்போகும் விசேஷங்களுக்கு தற்போதே நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து... தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பது, இல்லத்தரசிகளை குஷியில் ஆழ்த்தி வருகிறது...
13 நாட்களில் சவரனுக்கு 4160 ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது....
இதனால், அடுத்து வரும் முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷங்களுக்கு தற்பொழுதே மக்கள் நகைகளை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டிருப்பதுதான் தங்கத்தின் விலை சரிவுக்கு காரணம் என்கிறார்கள் நகைக்கடை வியாபாரிகள்..
டாலரில் பணத்தை வர்த்தகம் செய்யும் உலக முதலீட்டாளர்களை கவரும் விதமான இந்த நடவடிக்கைகளால் தங்கத்தின் விலை குறைவு இன்னும் சில நாள்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குஷியில் இருக்கின்றனர் இல்லத்தரசிகள்