தமிழகத்தை கலக்கிய பார்ட்னர்ஸ்.. எடுக்க எடுக்க தங்க நகைகள், தங்க கட்டிகள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை விழுப்புரத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பால்சாமி, மதன்குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ரூபாய்.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story